முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகா புயலால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை: 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

வெள்ளிக்கிழமை, 1 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

சென்னை : மகா புயல் அரபிக்கடலில் நிலை கொண்டுள்ளதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழை பெய்யும் என்றும், கனமழைக்கு வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் குமரிகடல் பகுதியில் உருவான காற்றழுத் தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிபுயலாக வலுப்பெற்றது.இந்த புயலுக்கு மகா என்று பெயரிடப்பட்டது. இந்நிலையில் மகா புயல் நேற்று முன்தினம் காலை லட்சத்தீவுகளின் கவரத்தி தீவை ஒட்டிய கடல்பகுதியில் நிலை கொண்டிருந்தது. மகா புயல் லட்சத்தீவு அருகே நிலை கொண்டுள்ளதால், மீனவர்கள் குமரி முதல் அரபிக்கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். வரும் 4-ம் தேதி அந்தமான் கடலில் காற்றழுத்தம் உருவாக வாய்ப்புள்ளதால் அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்  என்று வானிலை மையம் அறிவுறுத்தி இருந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவாலா 6 செ.மீ., இழுப்பூரில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதே போல் மயிலாடுதுறை, கோவில்பட்டியில் தலா 3 செ.மீ., கரூர், வால்பாறை, மாயனூர், திண்டிவனத்தில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து