முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விதர்பா அணியின் உள்ளூர் வீரராக தனது பெயரை பதிவு செய்தார் ஹாங்காங் வீரர் அன்ஷூமான் ராத்

வெள்ளிக்கிழமை, 1 நவம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி : ஹாங்காங் அணியின் முன்னாள் கேப்டனும், இளம் வீரருமான அன்ஷுமான் ராத், விதர்பா அணியின் உள்ளூர் வீரராக தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

ஹாங்காங் அணியின் முன்னாள் கேப்டன் அன்ஷுமான் ராத். இளம் வீரரான இவருக்கு இந்திய அணியில் இடம் பிடித்து விளையாட வேண்டும் என்பது தீராத ஆசையாக உள்ளது. அந்த ஆசையை நிறைவேற்றுவதற்காக இந்தியாவின் உள்ளூர் தொடர்களில் விளையாடி வரும் விதர்பா அணியில் தனது பெயரை உள்ளூர் வீரராக பதிவு செய்துள்ளார். 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக நிர்ணயிக்கப்பட்ட 286 ரன்கள் சேஸிங்கை ஹாங்காங் நெருங்கி வந்தது. தொடக்க வீரர் நிஜாகத் கான் உடன் இணைந்து 178 ரன்கள் சேர்த்தார். ஒரு கட்டத்தில் இந்தியா தோல்வியடைந்து விடும் நிலை இருந்து இறுதியில் ஹாங்காங் 26 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடியதுதான் இந்தியாவில் உள்ள அணியில் சேர உத்வேகமாக இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து