முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவின் டிக் டாக் செயலி மீது அமெரிக்க அரசு விசாரணை

சனிக்கிழமை, 2 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : சீனாவின் டிக் டாக் செயலி மீது அடுக்கடுக்கான புகார்கள் வெளியானதை அடுத்து, அமெரிக்க அரசு விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவில் இருந்து டிக் - டாக் எனும் செயலி கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியால் சமூக வலைதளங்களில் தவறான வீடியோக்கள் பதிவிடப்படுவதாகவும், அதனால் பல்வேறு தீமைகள் ஏற்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த செயலியை தடை செய்யவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டிக் டாக் செயலியின் பாதுகாப்பு தன்மை குறித்து அமெரிக்க அரசு  ஆய்வு செய்வதுடன், விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் அந்நிய முதலீடு தொடர்பான குழு விசாரணையை தொடங்கியுள்ளதாக பிரபல அமெரிக்க பத்திரிக்கையான நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. சமீபத்தில் டிக்டாக்கில் தணிக்கை மற்றும் தரவு சேகரிப்பு ஆகியவை கவலை அளிப்பதாக  பல செனட்டர்கள்  குறிப்பிட்டனர். இதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்து கருவூலத்துறை தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தற்போதைய ஒழுங்குமுறை நடைமுறைகள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால் அமெரிக்க பயனர்கள் மற்றும் விசாரணை அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவதற்கு முன்னுரிமை அளிப்பதாகவும் டிக்டாக் செயலி அதிகாரிகள் கூறியுள்ளனர். டிக் டாக்கின் உரிமையாளர் பைட் டான்ஸ், 2017-ல் மியூசிகலி செயலியை வாங்கி டிக் டாக்குடன் இணைத்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து