முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாலியில் தீவிரவாதிகள் தாக்குதல் ராணுவ வீரர்கள் 53 பேர் பலி

சனிக்கிழமை, 2 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

பமாகோ : ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 53 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக மாலி அரசாங்கம் நேற்று தெரிவித்துள்ளது.

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் மேனகா பிராந்தியத்தின் இந்தெலிமானில் முகாமுக்குள் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக என்று எபே செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு, ராணுவ முகாமை நோக்கி மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வேன்களிலும் தீவிரவாதிகள் வந்தனர். துப்பாக்கி ஏந்தியிருந்த அவர்கள் அனைவரும் கனரக ஆயுதங்களுடன் மூன்று குழுக்களாகப் பிரிந்து மூன்று வெவ்வேறு புள்ளிகளிலிருந்து ஒரே நேரத்தில் தாக்குதல்களை நடத்தினர். தீவிரவாதிகள் நடத்திய இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் முகாம்களிலிருந்து மாலியன் ஆயுதப்படை அகற்றப்பட வேண்டும் என்ற நோக்கம் இருந்துள்ளதாக தெரிகிறது. மீண்டும் அப்பகுதியை கட்டுக்குக்குள் கொண்டு வர, மற்ற முகாம்களிலிருந்து உயர்பாதுகாப்புப் படை இப் பகுதிக்கு வந்து சேரும் வரை ஆயுதப்படை பல மணி நேரங்களை எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுகுறித்து நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சர் யயா சங்கரே, டுவிட்டரில் கூறியுள்ளதாவது:

அந்த பகுதிக்கு உயர்பாதுகாப்புப் படைகள் அனுப்பப்பட்டு பொதுமக்களில் ஒருவர் உட்பட 54 சடலங்களை மீட்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலில் முகாமுக்குள் இருந்தவர்களில் 10 பேர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர். மேலும் குறிப்பிடத்தக்க அளவில் பொருள் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. தற்போது அப்பகுதி முழுவதும் நிலைமை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட உடல்களில் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. உயிர் பிழைத்தவர்கள் அனைவருக்கும் கடும் காயங்களுக்கு உள்ளானதால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு மாலி அமைச்சர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து