முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல்- ஜனநாயக கட்சி வேட்பாளர் போட்டியில் இருந்து ரூர்கி வாபஸ்

ஞாயிற்றுக்கிழமை, 3 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் போட்டியில் இருந்து ரூர்கி வாபஸ் பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப், குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட பலத்த போட்டி நிலவுகிறது. முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென், முன்னாள் எம்.பி. பெடோ ஓ ரூர்கி, இந்திய வம்சாவளி பெண் எம்.பி.க்கள் துளசி கப்போர்டு, கமலா ஹாரிஸ் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் களத்தில் இருந்தனர். இந்த போட்டியில் இருந்து பெடோ ஓ ரூர்கி திடீரென விலகி விட்டார். இதை அவர் டுவிட்டரில் அறிவித்துள்ளார். இவர் தனது பிரசாரத்தையும் நிறுத்தி விட்டார்.

இதுபற்றி ரூர்கி டுவிட்டரில், “நான் நாட்டுக்கான எனது சேவையில் வேட்பாளர் ஆக இருக்க மாட்டேன் என அறிவிக்கிறேன். இது எனது பிரசாரத்தின் முடிவாக இருந்தாலும், போட்டியின் நடுவில் நாம் நிற்கிறோம். இதில் கட்சியின் இறுதி வேட்பாளரை ஆதரிப்பேன். இதையே நீங்கள் ஒவ்வொருவரும் செய்ய ஊக்குவிப்பேன்” என கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து