எலினா ஸ்விடோலினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஆஷ்லே பார்ட்டி

ஞாயிற்றுக்கிழமை, 3 நவம்பர் 2019      விளையாட்டு
Ashley Party championship 2019 11 03

பெய்ஜிங் : சீனாவில் நடைபெற்ற டபிள் யூ.டி.ஏ. பைனல்ஸ் இறுதிப் போட்டியில் எலினா ஸ்விடோலினாவை வீழ்த்தி ஆஷ்லே பார்ட்டி சாம்பியன் பட்டம் வென்றார்.

டென்னிஸ் தரவரிசையில் முன்னிலையில் உள்ள 8 வீராங்கனைகளுக்கு இடையிலான டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடர் சீனாவில் உள்ள ஷின்சென்னில் நடைபெற்றது.குரூப் லீக், அரையிறுதிக்குப் பின் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்ட்டி, 8-ம் நிலை வீராங்கனையான எலினா ஸ்விடோலினா ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். நேற்று  இறுதிப் போட்டி நடைபெற்றது. ஆட்டம் தொடங்கியதில் இருந்து ஆஷ்லே பார்ட்டி ஆதிக்கம் செலுத்தி வந்தார். முதல் செட்டை 6 - 4 என கைப்பற்றினார். 2-வது செட்டிலும் ஆஷ்லே பார்ட்டியின் ஆதிக்கம் தொடர்ந்தது. 2-வது செட்டை 6-3 எனக் கைப்பற்றி அவர், சாம்பியன் பட்டம் வென்றார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து