முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளாண்மைத்துறை சார்பில் சிவரக்கோட்டை கண்மாய் கரையில் 1500 பனைவிதைகள் நடவு:

ஞாயிற்றுக்கிழமை, 3 நவம்பர் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகேயுள்ள சிவரக்கோட்டை கண்மாய் கரையில் வேளாண்மைத்துறை சார்பில் பாரம்பரிய முறையில் 1500 பனைவிதைகள் நடவு செய்திடும் நிகழ்ச்சி வெகு சிறப்புடன் நடைபெற்றது.கள்ளிக்குடி வேளாண்துறை மற்றும் திருநகர் பக்கம் சமூக ஆர்வலர்கள் குழு,விஸ்வா டிரஸ்ட் அமைப்பினர் இணைந்து பனைவிதைகளை நடவு செய்திடும் பணிகளில் ஈடுபட்டனர்.தமிழக முதல்வரின் சிறப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வில் கள்ளிக்குடி வேளாண்துறை அதிகாரிகள்,மதுரை மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பனைவிதை நடவு பணிகளுக்கு உக்கமளித்தனர்.இதனை தொடர்ந்து சிவரக்கோட்டை கண்மாய் கரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 1500க்கும் அதிகமான தமிழ்ப் பாரம்பரியம் மிக்க பனைவிதைகளை இளைஞர்கள் நடவு செய்தனர்.தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டத்தினை உயர்த்தி மண் வளத்தையும், மழை வளத்தையும் பெரிதும் காத்திடும் வகையில் சிவரக்கோட்டை கண்மாய் கரையில் 1500க்கும் மேற்பட்ட பனைமர விதைகள் நடவு செய்யப்பட்ட நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும்,பாராட்டுதலையும் பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து