முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சமையல் சாதனம் விண்கலத்தில் பயணம்

திங்கட்கிழமை, 4 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சமையல் சாதனங்கள் விண்கலத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து ஆராய்ச்சிகள் நடத்தி வருகின்றன. இந்த விண்வெளி நிலையத்தில் வீரர்கள் தங்கி இருந்து ஆய்வுப்பணியை கவனிக்கின்றனர். அவர்கள் பிஸ்கட், சாக்லேட் போன்ற உணவுப்பொருட்கள் தயாரித்து சாப்பிடுவதற்கான மாவு, ‘மைக்ரோவேவ் அவன்’ (அதிநவீன சமையல் சாதனம்) ஆகியவை அமெரிக்காவின் வெர்ஜீனியா வாலப்ஸ் தீவில் இருந்து சைக்னஸ் என்ற விண்கலத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று (திங்கட்கிழமை) அந்த விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்று அடைந்தது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி உள்ள வீரர்கள் முதன்முதலாக அங்கு ‘மைக்ரோவேவ் அவன்’ பயன்படுத்தி பிஸ்கெட், சாக்லேட் போன்ற உணவுப்பொருட் களை தயாரித்து சுவைக்கப்போகிறார்கள்.

மேலும் ஸ்போர்ட்ஸ் கார் பாகங்களும் சைக்னஸ் விண்கலத்தின்மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து