பார்முலா 1 கார் பந்தயம்- சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தார் ஹேமில்டன்

திங்கட்கிழமை, 4 நவம்பர் 2019      விளையாட்டு
Hamilton 2019 11 04

நியூசிலாந்து : அமெரிக்காவில் நடைபெற்ற ‘பார்முலா1’ கார் பந்தயத்தில் ஹேமில்டன் 6 -வது முறையாக சாம்பியன் பட்டத்தை பெற உள்ளார்.

கார் பந்தய போட்டிகளில் பிரசித்தி பெற்றது ‘பார்முலா 1’ பந்தயமாகும். இந்த ஆண்டுக்கான ‘பார்முலா1’ கார் பந்தயம் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. 19 - வது ரவுண்டான அமெரிக்க கிராண்ட் பிரீ பந்தயம் நியூ ஜெர்சியில் நடந்தது. இந்தப் போட்டியில் பின்லாந்து வீரர் போட்டஸ் வெற்றி பெற்றார். அவர் இந்த சீசனில் பெற்ற 4-வது வெற்றியாகும். ஏற்கனவே ஆஸ்திரேலியன், அசெர் பைசான், ஜப்பான் கிராண்ட் பிரீ பந்தயங்களில் வெற்றி பெற்று இருந்தார்.

இந்த பந்தயத்தில் இங்கிலாந்தை சேர்ந்த லீவிஸ் ஹேல்மில்டன் 2-வது இடத்தை பிடித்தார். இதன் மூலம் அவர் ‘பார்முலா 1’ பந்தயத்தில் சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தார். அவர் 381 புள்ளிகள் பெற்று உள்ளார். இன்னும் 2 சுற்றுகள் இருப்பதால் ஹேமில்டன் சாம்பியன் பட்டம் பெறுகிறார். போட்டஸ் 314 புள்ளியுடன் 2-வது இடத்திலும், சார்லஸ் லெசிர்க் 249 புள்ளியுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

‘பார்முலா1’ கார் பந்தயத்தில் ஹேமில்டன் 6 - வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். அவர் தொடர்ந்து ‘ஹாட்ரிக்’ பட்டம் பெற்றுள்ளார். ஹேமில்டன் 2008, 2014, 2015, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் ‘பார்முலா 1’ போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்று இருக்கிறார்.

ஜெர்மனியை சேர்ந்த மைக்கேல் சுமேக்கர் அதிக பட்சமாக 7 தடவை (1994, 1995, 2000, 2001, 2002, 2003, 2004) பட்டம் பெற்றுள்ளார். 34 வயதான ஹேமில்டன் 6 பட்டம் பெற்று 2-வது இடத்தில் உள்ளார்

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து