தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது: விஜயகாந்த்

செவ்வாய்க்கிழமை, 5 நவம்பர் 2019      தமிழகம்
vijayakanth 2019 10 06

சென்னை, : தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை 7-ம் தேதி விஜயகாந்த் தலைமையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தே.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தே.மு.தி.க. மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கேப்டன் விஜயகாந்த் தலைமையில் நாளை 7.11.2019 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெறவுள்ளது. தாங்கள் அனைவரும் தவறாமல் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்தும், கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து