முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்ப்பின் அழைப்பை ஏற்று துருக்கி அதிபர் அடுத்த வாரம் அமெரிக்கா பயணம்

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

அங்காரா : துருக்கி அதிபர் எர்டோகன் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அழைப்பை ஏற்று அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல இருக்கிறார்.

இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், துருக்கி அதிபர் எர்டோகனும்  தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பேசினர். இதில் ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசித்தனர். மேலும் துருக்கி - சிரிய எல்லையில் தற்போதைய நிலவரம் குறித்து இரு தலைவர்களும் பேசினர். இந்த உரையாடலில், அமெரிக்கா வர துருக்கி அதிபர் எர்டோகனுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்றுக் கொள்வதாக எர்டோகன் உறுதிப்படுத்தி இருக்கிறார் என்று செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் 13-ம் தேதி வெள்ளை மாளிகையில் டிரம்ப்பை சந்திக்க உள்ளார் எர்டோகன். முன்னதாக, துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோர பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தினர். துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறினர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். சிரியா மீதான தாக்குதல் காரணமாக உலக நாடுகள் துருக்கி மீது விமர்சனங்கள் எழுப்ப,  துருக்கி மற்றும் குர்துப் படை இடையே 5 நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. மேலும் துருக்கி மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையையும் திரும்பப் பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து