முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண்-2 ஏற்றம்: மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை.

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்,- வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதையடுத்து பாம்பன்,ராமேசுவரம் ஆழ்கடல் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்களுக்கு தெரிவிக்கும் வகையில்  பாம்பன் பகுதியிலுள்ள துறைமுகத்தில்  நேற்று 2 ஆம் எண்  புயல் எச்சரிக்கை கூண்டு  ஏற்றப்பட்டது.
  .இந்திய வானிலை ஆய்வு மையம், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.இந்த காற்றழுத்தம்  வங்காலதேசம் கடலோரப்பகுதியில் கிழக்கு, தென் கிழக்கு திசைப்பகுதியில் 830 கி.மீ வேகத்திலும்,ஒடிசா  கடலோரப்பகுதியில்
 தென் கிழக்கு கடல் பகுதியில் 680 கி.மீ வேகத்திலும், காற்றுடன் கூடிய அலை உருவாகி புயல் மையம் கொண்டுள்ளது. ஆதலால் இந்த கடல் பகுதியின் தொடர்ச்சியாக உள்ள தமிழகத்தின் தென் கடலோரப்பகுதியான ராமநாதபுரம் மாவட்டம்  மண்டம்,பாம்பன்,ராமேசுவரம் ஆகிய ஆழ் கடலோரப்பகுதியில் புயல் உருவாகி கரையில் பலத்த காற்றுடன் கூடிய கண மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது ஆதலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பன் துறைமுக அலுவலகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 2 நேற்று ஏற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து பாம்பன் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என தடை விதித்து மீன்துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு தெரிவித்துள்ளனர்.மேலும்  கடல் கரையோர பகுதியில் வசிக்கு மீனவர்கள்,பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து