முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டாலினுக்கு விக்கிரவாண்டி, நாங்குநேரியில் மக்கள் மிகப் பெரிய அல்வா கொடுத்துள்ளனர்: விக்கிரவாண்டி கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பேச்சு

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2019      தமிழகம்

நாடாளுமன்ற தேர்தலில் பொய் வாக்குறுதி கூறி வெற்றி பெற்ற ஸ்டாலினுக்கு விக்கிரவாண்டி, நாங்குநேரியில் மக்கள் மிகப் பெரிய அல்வா கொடுத்துள்ளனர் என்று விக்கிரவாண்டியில் நடந்த நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசினார்.

தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் கடந்த மாதம் வெளியானது. இதில் இரண்டு தொகுதியிலுமே அ.தி.மு.க. வெற்றி பெற்றது. நாங்குநேரியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் வெற்றி பெற்றார். விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் நன்றி அறிவிக்கும் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடையே முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.  அப்போது அவர் பேசியதாவது,

 நாடாளுமன்ற தேர்தலில் பொய் வாக்குறுதிகளை அளித்து ஸ்டாலின் வெற்றி பெற்றார். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி மக்கள் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய அல்வா கொடுத்துள்ளனர். ஸ்டாலின் ஆக்கப்பூர்வமான கருத்துகளை கூறாமல் போராட்டங்களை தூண்டிக்கொண்டுள்ளார்.  ஸ்டாலினின் எண்ணங்கள் அனைத்தும் இடைத்தேர்தல் மூலம் நிராசையாகி உள்ளனஆக்கப்பூர்வமான கருத்துகளை கூறாமல் போராட்டங்களை தூண்டிக் கொண்டுள்ளர் ஸ்டாலின். யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் ஆட்சிக்கு வருவது அ.தி.மு.க. மட்டும்தான். சிலர் அரசியலை தொழில் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அண்ணா கண்ட கனவை நனவாக்கவே அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர் உருவாக்கினார், எம்.ஜி.ஆரைப் போன்று யாரும் திரையுலகில் இருந்து வர முடியாது. வீட்டில் இருந்து கொண்டு பேட்டி கொடுப்பவர் அல்ல எம்.ஜி.ஆர். பலமான கூட்டணியை அ.தி.மு.க. அமைத்துள்ளது.

அதிமுகவின் கூட்டணி பலம்பொருந்தியது; யாரும் அதனிடம் நெருங்க முடியாதுஅவருக்கு இப்போது மக்கள் தக்க பதிலடி கொடுத்து விட்டனர். தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் ஆட்சிக்கு வருவது அ.தி.மு.க. மட்டும்தான். அ.தி.மு.க. ஆட்சிதான் தொடர போகிறது. அரசியலை தொழில் என்று பலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இது எளிமையான விஷயம் கிடையாது. அரசியலில் கால் வைத்து நிற்பது கடினம். அ.தி.மு.க.வின் கூட்டணி மிகப்பெரியது, எங்கள் கூட்டணியை யாராலும் நெருங்க முடியாது. சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க.விற்கு மக்கள் அல்வா கொடுத்து விட்டார்கள். காங்கிரஸ் கோட்டையிலும், தி.மு.க. கோட்டையிலும் அ.தி.மு.க.வே வென்றுள்ளது. எங்கள் கட்சியில் வெற்றிடம் இல்லை, தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்று இந்த தேர்தல் முடிவுகள் மூலம் நிரூபணமாகியுள்ளது. எங்கள் ஆட்சிக்கு சான்றிதழ் கொடுக்கும் வகையில் இந்த தேர்தல் முடிவுகள் வந்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் பல சோதனைகளை சந்தித்தோம். எங்கள் ஆட்சிக்கு நிறைய நெருக்கடி வந்தது. தி.மு.க.வின் திட்டங்களை எல்லாம் மக்கள் தோல்வி அடைய செய்து விட்டார்கள்.  இப்போது ஆட்சி கவிழும், அப்போது ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் கனவு கண்டு கொண்டு இருக்கிறார். ஆனால் ஸ்டாலினின் கனவை மக்கள் தவிடு பொடியாக்கி விட்டார்கள். உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணிதான் வெற்றி பெறும். அதே போல் தமிழக சட்டசபை தேர்தலிலும் 2021-ல் அ.தி.மு.க. கூட்டணிதான் வெற்றி பெறும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து