முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியகுளம் மலைமேல் கைலாசநாதர் திருக்கோவிலில் சனி பிரதோஷ விழா

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2019      தேனி
Image Unavailable

 தேனி - தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மலைமேல் பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் திருக்கோயிலில் நேற்று முன்தினம் சனி பிரதோஷம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் கைலாசநாதர் சுவாமிக்கும் பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உற்சவமூர்த்தி கோவிலை வலம் வர பக்தர்கள் ஓம் நமச்சிவாயா கோஷமிட்டனர். பின்னர் சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் அன்னதானம் மற்றும் பிரசாதத்தை  தேனி ஆவின் தலைவர் ஓ.ராஜா வழங்கினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மலைமேல் கைலாசநாதர் திருக்கோவில் அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழுத்தலைவர் வி.ப.ஜெயபிரதீப், செயலாளர் சிவக்குமார் பொருளாளர் விஜயராணி உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து