முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் நூறுநாள் வேலைத்திட்ட பணிகள் குறித்து மாணிக்கம்தாகூர் எம்.பி.,ஆய்வு:

புதன்கிழமை, 13 நவம்பர் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற்று வரும் நூறுநாள் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம்தாகூர் நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம்தாகூர் நேற்று திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு திடீரென்று வருகை தந்து மத்திய அரசின் சார்பில் நடைபெற்று வரும் 100நாள் வேலை,ஜல்சக்தி உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.பின்னர் திருமங்கலம் யூனியனில் உள்ள திரளி,ஆலம்பட்டி,கரிசல்பட்டி, மேலக்கோட்டை,கீழக்கோட்டை,மைக்குடி,விருசங்குளம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளுக்கு நேரில் சென்ற மாணிக்கம்தாகூர் எம்.பி.,நூறுநாள் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.பின்னர் அந்தந்த பகுதி பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றினை உடனடியாக நிறைவேற்றி தந்திடுமாறு திருமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் உதயகுமார் மற்றும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.மேலும் ஆலம்பட்டி கிராமத்தில் திருமங்கலம் ரெட்கிராஸ் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலவேம்பு கசாயம் வழங்கிடும் நிகழ்வினை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.
அப்போது மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.ஜெயராம், தி.மு.க ஒன்றிய செயலாளர் தனபாண்டியன்,ம.தி.மு.க நிர்வாகிகள் அனிதாபால்ராஜ், திருப்பதி,காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அம்மாபட்டி பாண்டியன், பிருதிவிராஜ், தாமோதரன்,சுப்பரமணியன்,சரவணபகவான்,பிரபாகரன்,இளங்கோவன்,முருகேசன்,அன்னக்கொடி மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து