சாதனை பட்டியலில் இணைய அஸ்வினுக்கு வாய்ப்பு

புதன்கிழமை, 13 நவம்பர் 2019      விளையாட்டு
SPORTS-4 2019 11 13

Source: provided

மும்பை : இந்திய மண்ணில் 250 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனைக்கு அஸ்வினுக்கு இன்னும் ஒரு விக்கெட்டுதான் தேவை.
இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். தற்போது டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார்.

இந்திய மண்ணில் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார்.இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட்  இன்று தொடங்குகிறது. இதில் ஒரு விக்கெட் வீழ்த்தினால் இந்திய மண்ணில் 250 விக்கெட்டுக்கள் வீழ்த்திய 3-வது வீரர் என்ற பெருமையை பெறுவார்.

இதற்கு முன் அனில் கும்ப்ளே (350), ஹர்பஜன் சிங் (265) ஆகியோர் இந்திய மண்ணில் 250 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளனர். வங்காளதேசம் அணிக்கெதிரான முதல் டெஸ்டில் அஸ்வின் இவர்களுடன் இணைய இருக்கிறார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து