மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன: அமித்ஷா

புதன்கிழமை, 13 நவம்பர் 2019      இந்தியா
amit shah 2019 02 02

மராட்டியத்தில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாததால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. தேர்தல் முடிவு வெளியான நாள் முதல் 20 நாட்களாக நடந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது. இனி கவர்னர் பகத்சிங் கோஷியாரி தலைமையில் மராட்டிய அரசின் நிர்வாகம் நடைபெறும். அவர் தனக்கு உதவியாக சில ஆலோசகர்களை நியமித்து கொள்வார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட சட்டசபை இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் முடக்கி வைக்கப்பட்டு இருக்கும்.

அடுத்து போதிய ஆதரவுடன் ஆட்சி அமைக்க யாரும் முன்வந்தால், ஜனாதிபதி ஆட்சி விலக்கி கொள்ளப்பட்டு, புதிய அரசு பதவி ஏற்க வாய்ப்பு உள்ளது. இல்லாவிட்டால் சட்டசபைக்கு புதிதாக தேர்தல் நடத்தப்படும்.

இந்நிலையில் மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது தொடர்பாக உள்துறை அமைச்சரும், பா.ஜ.க தலைவருமான அமித்ஷா தனியார் செய்தி நிறுவனம் நடத்திய நேர்காணலில் கூறியதாவது:-

கூட்டணி வெற்றி பெற்றால் தேவேந்திர பட்னாவிஸ் தான் முதல்வர் ஆவார் என தேர்தலுக்கு முன்பே கூறியிருந்தோம், ஆனால் சிவசேனா தற்போது புதிதாக கோரிக்கை வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டசபை பதவிக்காலம் முடிந்த பின்னரே, கட்சிகளுக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார். இதற்கு முன்னர் எந்த மாநிலத்திற்கும் ஆட்சியமைக்க 18 நாட்கள் கொடுக்கப்பட்டதில்லை. தற்போது கூட பெரும்பான்மை உள்ள கட்சி ஆட்சியமைக்க உரிமை கோரி கவர்னரை அணுகலாம். மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன. ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கபில் சிபில் கூறுவது குழந்தைத்தனமானது.
இவ்வாறு அவர் கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து