தென்காசி, திருப்பத்தூர் உள்ளிட்ட புதிய மாவட்டங்களில் இடம் பெற்ற தாலுகாக்கள் பட்டியல்: அரசாணை வெளியீடு

புதன்கிழமை, 13 நவம்பர் 2019      தமிழகம்
TN assembly 2018 10 12

தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய புதிய மாவட்டங்களில் இடம் பெற்றிருக்கும் தாலூக்கள் பட்டியலை தமிழக அரசு அறிவித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு புதிய தென்காசி மாவட்டம், வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்தார். அதைத்தொடர்ந்து புதிய மாவட்டங்கள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதற்கான அறிவிக்கையை கடந்த 12-ம் தேதி வருவாய்த்துறை முதன்மை செயலாளர் (பொறுப்பு) ககன்தீப் பேடி வெளியிட்டுள்ளார். அந்த அறிவிக்கையில் தென்காசியை தலைமையிடமாக கொண்டு அமைக்கப்படும் புதிய மாவட்டத்தில் தென்காசி, சங்கரன் கோவில் , செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வீரகேரளம்புதூர், திருவேங்கடம், ஆலங்குளம் ஆகிய 8 தாலுக்காக்கள் இணைந்திருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது,

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி சேரன்மாதேவி, மண்ணூர் பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், திசையன்விளை, அம்பா சமுத்திரம் ஆகிய 8 தாலுகாக்கள் இணைந்திருக்கும் என்று அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வேலூரை தலைமையிடமாக கொண்டு வேலூர் மாவட்டம் அமைக்கப்படும். வேலூர் மாவட்டத்தில் வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம் ஆகிய தாலுகாக்கள் இடம் பெற்றிருக்கும் என்றும் புதிதாக அமைக்கப்படும் திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு அமைக்கப்பட இருக்கும் திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்றாம்பள்ளி, ஆம்பூர் ஆகிய 4 தாலுகாக்கள் இடம் பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு அமைக்கப்படும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, அரக்கோணம், வாலாஜா, ஆற்காடு, நெமேலி, ஆகிய 5 தாலுக்காக்கள் இடம் பெற்றிருக்கும். காஞ்சிபுரத்தை தலைமையிடமாக கொண்டு அமைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர், உத்தரமேரூர் வாலாஜாபாத், குன்றத்தூர் ஆகிய 5 தாலுக்காக்கள் இணைக்கப்பட்டிருக்கும். புதிதாக அமைக்கப்படவிருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், பல்லாவரம், வண்டலூர் ஆகிய 8 தாலுக்காக்கள் இணைக்கப்பட்டிருக்கும் என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து