சபரிமலை மண்டல பூஜைக்காக நாளை கோவில் நடை திறப்பு

வியாழக்கிழமை, 14 நவம்பர் 2019      ஆன்மிகம்
Sabarimala 2019 11 11

திருவனந்தபுரம்  : சபரிமலையில் மண்டல பூஜைக்காக நாளை 16-ம் தேதி கோவில் நடை திறக்கப்படுகிறது.

இந்த ஆண்டு மண்டல பூஜை சீசனுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை 16-ம் தேதி திறக்கப்படுகிறது. நாளை மாலை 5.30 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ்மோகனரு தலைமையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையைத் திறந்து வழிபாடுகளை மேற்கொள்ளவுள்ளனர். ஐயப்பன் மேல் சாத்தப்பட்ட விபூதி பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். மேல்சாந்தியின் பதவிக்காலம் அன்றுடன் முடிவடைவதால் புதிதாக தேர்வான மேல்சாந்தி சுதிர் நம்பூதிரியிடம் கோயில் சாவி ஒப்படைக்கப்படும். மறுநாள் காலை கார்த்திகை முதல் தேதியில் இருந்து 41 நாட்களுக்கும் தொடர்ந்து பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதிகாலையில் நிர்மால்ய பூஜை, சந்தனம், நெய் அபிஷேகம் லட்சார்ச்சனை, படிபூஜை உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெறும். மண்டல பூஜை டிசம்பர் மாதம் 27-ம் தேதி நடைபெறும். மண்டல பூஜை சீசன் தொடங்க இருப்பதால் சபரிமலையில் அதற்கான ஏற்பாடுகள் முழு அளவில் செய்யப்பட்டுள்ளன. சபரிமலையில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து