ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு இல்லை- சீராய்வு மனுக்களை தள்ளுபடிசெய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி : ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், ரபேல் போர் விமான ஒப்பந்த நடைமுறையில் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை என்றும், முறைகேடு நடந்ததாக கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் கூறியது.
இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நேற்று தீர்ப்பு வழங்கியது.
அதில், ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று கூறிய நீதிமன்றம், முந்தைய தீர்ப்பை உறுதி செய்தது. அத்துடன் சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்வதாகவும் அறிவித்தது. ரபேல் போர் விமானங்களை வாங்கிய விவகாரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சான்றிதழ் வழங்கி விட்ட இந்த நிலையிலும் கூட ராகுல் காந்தி ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். குறிப்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு(ஜே.பி.சி) மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ராகுல் காந்தி இப்போதும் வலியுறுத்தி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.