ஜார்க்கண்ட் மாநிலம் உதயமான நாள்: பிரதமர் மோடி வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 15 நவம்பர் 2019      இந்தியா
Jharkhand 2019 11 15

ஜார்க்கண்ட் மாநிலம் உதயமான தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் உதயமான நாளில் மக்களுக்கு வாழ்த்துகள்.  ஜார்க்கண்ட் துணிச்சலும், கருணையும் ஒருங்கிணைந்த மாநிலம். இந்த மாநிலத்தின் மக்கள் எப்போதும் இயற்கையுடன் இணைந்த நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். பல துறைகளில் அவர்கள் சிறந்து விளங்குகின்றனர். அவர்களது கடின உழைப்புக்கு நன்றி. ஜார்க்கண்ட் தொடர்ந்து முன்னேற்றத்தின் புதிய உச்சத்தை அடையவும், பகவான் பிர்ஸா முண்டாவின் முன்னேற்றமடைந்த, மகிழ்ச்சியான மாநிலம் என்ற கனவு நனவாகவும் வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து