முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: உத்தரவை அமல்படுத்த கேரள அரசுக்கு நீதிபதி அறிவுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 15 நவம்பர் 2019      ஆன்மிகம்
Image Unavailable

மண்டல - மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  சுப்ரீம்கோர்ட்டின் இந்த உத்தரவை கேரள மாநில அரசு முறையாக அமல்படுத்த வேண்டும். சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை செயல்படுத்தாமல் இருப்பதை எங்களால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று  சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி நாரிமன் தெரிவித்துள்ளார்.   சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம் 1-ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு 60 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

நடப்பு மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடைஇன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை  அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும்.

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்வது தொடர்பான வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. அதேசமயம் இளம்பெண்கள் அங்கு சாமி தரிசனம் செய்வதற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று சபரிமலை கோவில் நடை திறக்கப்படுவதால் அங்கு சாமி தரிசனத்திற்கு இளம்பெண்கள் மீண்டும் வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது.  சபரிமலை கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 133 இளம்பெண்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

சபரிமலை வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகளின் தீர்ப்பு குழப்பத்தை ஏற்படுத்துவதாக தகவல் வெளியானதால் நேற்று (வெள்ளிக்கிழமை) இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி நாரிமன் விளக்கம் அளித்து கூறியதாவது:-

சபரிமலையில் அனைத்து வயது பெண்கள் வழிபாடு செய்வதற்கு எந்த தடையும் இல்லை. சுப்ரீம் கோர்ட்டு இது தொடர்பாக அளித்துள்ள உத்தரவு மாற்றப்படவில்லை. எனவே பெண்கள் தொடர்ந்து சபரிமலைக்கு சென்று வழிபடலாம். சுப்ரீம்கோர்ட்டின் இந்த உத்தரவை கேரள மாநில அரசு முறையாக அமல்படுத்த வேண்டும். சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை செயல்படுத்தாமல் இருப்பதை எங்களால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இவ்வாறு நீதிபதி நாரிமன் கூறினார். அவர் மத்திய அரசின் வக்கீல் துஷார் மேத்தாவை அழைத்து சபரிமலை வழக்கில் பிறப்பிக்கப்பட்ட முந்தைய உத்தரவை முறைப்படி அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார். இந்த நிலையில் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக்கூடாது என்று கேரள அரசுக்கு பா.ஜ.க., காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக சபரிமலையில் மீண்டும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பம்பை முதல் சன்னிதானம் வரை 5 கட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 ஆயிரம் போலீசார் இந்த பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து