முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 நாட்களில் முடிவுக்கு வந்த இந்தூர் டெஸ்ட்: இந்திய அணி பந்து வீச்சில் சுருண்டது வங்கதேசம்

சனிக்கிழமை, 16 நவம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

இந்தூர் : இந்தூரில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ், 130 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு சுருண்ட வங்கதேசம், இரண்டாவது இன்னிங்சில் 213 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என  முன்னிலை வகிக்கிறது.

இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், டாசில் வென்று பேட் செய்த வங்கதேசம் முதல் இன்னிங்சில் 150 ரன்னுக்கு சுருண்டது. முஷ்பிகுர் ரகிம் அதிகபட்சமாக 43 ரன் எடுத்தார். கேப்டன் மோமினுல் ஹக் 37, லிட்டன் தாஸ் 21 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். இந்திய பந்துவீச்சில் முகமது ஷமி 3, இஷாந்த், உமேஷ், அஷ்வின் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து. முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன் எடுத்திருந்தது. ரோகித் 6 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், மயாங்க் அகர்வால் 37 ரன் மற்றும் செதேஷ்வர் புஜாரா 43 ரன்னுடன் நேற்று முன்தினம் 2-ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று 3-ம் நாள் ஆட்டம் துவங்குவதற்கு முன்பாகவே, இந்திய அணி தனது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதையடுத்து 343 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய வங்கதேச அணி வீரர்கள், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர். இதனிடையே, 2-வது இன்னிங்சில் வங்கதேசம் தரப்பில் அதிகபட்சமாக முஸ்பிகுர் மெஹிதி ஹாசன் -38, லிட்டன் தாஸ் ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். இந்திய தரப்பில் ஷமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ்வின் 3, உமேஷ் யாதவ் 2  இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து