முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நிறைவேற்ற அரசியல் கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும் - சுனில் அரோரா பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

ஆமதாபாத் : ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அரசியல் கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.   

பிரதமர் மோடி, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை முன்மொழிந்து அதை செயல்படுத்துவதில் விருப்பம் கொண்டுள்ளார். நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் இப்படி ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துகிறபோது அது பல்லாயிரம் கோடி பணத்தை மிச்சப்படுத்தும். நேரம் வீணாவது தடுக்கப்படும். அரசு அதிகாரிகள், ஊழியர்கள், போலீஸ் படையினரை அடிக்கடி தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துவதை தடுத்து மக்கள் பணியில் ஈடுபடுத்த முடியும்.  

அதே நேரத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்துவது என்பது எளிதான ஒன்றல்ல. தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டியது இருக்கிறது.

குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகேயுள்ள கோட்டாவில் அமைந்துள்ள நிர்மா பல்கலைக்கழகத்தில்  நடந்த நிகழ்ச்சியில், தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா பேசும்போது, ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் பற்றி குறிப்பிட்டார்.

அப்போது அவர் கூறுகையில்,

அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி, சட்டத்தில் தேவையான திருத்தங்களை செய்தாலன்றி ஒரே நேரத்தில் தேர்தல் அல்லது ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மிக விரைவில் நடந்து விடாது என்று குறிப்பிட்டார். 

இது போன்ற ஒரு ஏற்பாட்டை செய்வதற்கு முன்னுரிமை அளிப்போம் என்று சொல்வதைத் தவிர இதில் தேர்தல் கமிஷன் கூடுதலாக செய்வதற்கு ஒன்றும் இல்லை என்றும் அவர் கூறினார். 

தொடர்ந்து அவர் பேசும்போது, “இது அதிகார வர்க்கத்தின் அறிக்கை அல்ல. நாங்கள் கொள்கை அளவில் ஒப்புக்கொள்கிறோம். எப்படி இருப்பினும். இதில் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக அமர்ந்து பேசி, ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டும். சட்டத்தில் தேவையான திருத்தங்களை செய்ய வேண்டும். அப்போதுதான் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது சாத்தியப்படும்” என கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து