நட்புறவு கால்பந்து: அர்ஜென்டினா அணியிடம் பிரேசில் தோல்வி

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2019      விளையாட்டு
Brazil defeat 2019 11 17

ரியாத் : நட்புறவு கால்பந்து போட்டியில், அர்ஜென்டினா அணியிடம் பிரேசில் தோல்வியடைந்தது.

பிரேசில் - அர்ஜென்டினா அணிகள் இடையிலான நட்புறவு கால்பந்து போட்டி சவூதி அரேபியாவில் நடந்தது. விறுவிறுப்பான இந்த போட்டியில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தியது. பந்து பிரேசில் அணியின் கட்டுப்பாட்டில் அதிக நேரம் (66 சதவீதம்) இருந்தாலும் அந்த அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. 4 போட்டியில் விளையாட விதிக்கப்பட்ட தடை முடிந்து அர்ஜென்டினா அணிக்கு திரும்பிய நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி 13-வது நிமிடத்தில் அடித்த கோலே வெற்றி கோலாக அமைந்தது. கடந்த ஜூலை மாதம் நடந்த கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் வெற்றி பெறவில்லை. 2013-ம் ஆண்டுக்கு பிறகு அந்த அணியின் மோசமான செயல்பாடு இதுவாகும். கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் அரைஇறுதியில் 0-2 என்ற கோல் கணக்கில் பிரேசிலிடம் தோல்வி கண்ட அர்ஜென்டினா அணி அதற்கு பதிலடி கொடுத்தது.

17.12.2019 to 14.01.2020 Markali Monthly Rasipalan | 2019 டிசம்பர் மாத ராசிபலன்

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து