நிலைக்குழு கூட்டங்களை எம்.பி.க்கள் புறக்கணிப்பதா? - வெங்கையா நாயுடு

திங்கட்கிழமை, 18 நவம்பர் 2019      இந்தியா
Venkaiah naidu 2019 08 07

புதுடெல்லி : நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்களில் எம்.பி.க்கள் பங்கேற்காததற்கு வெங்கையா நாயுடு கவலை தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற மாநிலங்களவையின் 250-வது கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதையொட்டி, மாநிலங்களவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அதில், மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்றார். 

கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

துறைரீதியான நாடாளுமன்ற நிலைக்குழுக்கள், பிரச்சினைகளை விரிவாக ஆராய்வதற்கான உறுதியான அமைப்பாகும். ஆனால், அத்தகைய நிலைக்குழு கூட்டங்களில் சமீபகாலமாக எம்.பி.க்கள் பங்கேற்காமல் தவிர்ப்பதாக வெளியாகும் தகவல்கள் கவலை அளிக்கிறது.

எம்.பி.க்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும். அவர்கள் பங்கேற்பதை அவர்களுடைய கட்சி தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான், நிலைக்குழுக்கள் தங்கள் கடமையை சரியாக செய்ய முடியும். அந்த குழுக்களின் தரம் தாழ அனுமதிக்கக்கூடாது.

இதுபோல், நாடாளுமன்ற டி.வி. சேனல்களை மேலும் திறம்பட செயல்பட வைப்பது குறித்த ஆராய ஒரு கமிட்டியை நான் அமைத்துள்ளேன். கடந்த 67 ஆண்டுகளில், மாநிலங்களவை எவ்வளவோ சாதனைகளை செய்துள்ளது. இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது.மாநிலங்களவையின் 250-வது கூட்டத்தொடரை கொண்டாடும்வகையில்,   250 ரூபாய் வெள்ளி நாணயமும், ஒரு அஞ்சல் தலையும் வெளியிடப்படும்.இந்திய அரசியலில் மாநிலங்களவையின் பங்கு குறித்து விவாதம் நடத்தப்படும். அரசியல் சட்டம் ஏற்கப்பட்டதன் 70-வது ஆண்டுவிழாவை குறிக்கும்வகையில், நாடாளுமன்ற கூட்டு கூட்டம் 26-ந் தேதி நடைபெறும். இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.

Annai Akilandeswari Thiru Kovil Varalaaru | அன்னை அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் வரலாறு | #Akilandeswari

Health mix for babies | Mixed Nuts Powder | Protein powder for kids

Egg Malai Masala | Easy step by step recipe

Chicken Chukka Chettinad Style | How to make Chicken Curry | செட்டினாட் சிக்கன் சுக்கா

Easy Wheat Biscuit recipe | Crispy & Crunchy Snacks | Ladies Glitz

Chicken 65 recipe | Authentic Indian recipes | Ladies Glitz

Vegetable Cutlet | Crunchy & Crispy Recipe by Ladies Glitz

Chocolate Milkshake | Banana Milkshake | Easy & yummy tasting milkshake recipes

Easy art & craft using Egg shells & Newspaper | Art from waste material to useful | Home decor ideas

Chapathi Veg Roll | Kids Veg Wrap | Ladies Glitz

Easy idli podi recipe | Idli milagai podi in tamil | இட்லி பொடி | Milagai podi recipe

Snack ideas for children | கடலைமாவு முட்டை ஆம்லெட் | Everyday snacks recipe -1

Ghee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து