முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் சிறப்பு எழுத்தறிவு திட்டம் கீழக்கரையில் அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 18 நவம்பர் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்- வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் சிறப்பு எழுத்தறிவு திட்டத்தினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
     ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை சதக் பொறியியல் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கிவரும் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பாக நடைபெற்ற விழாவில் பள்ளிக் கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்; ‘சிறப்பு எழுத்தறிவு திட்டம் 2019-2021" திட்டத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் வீர ராகவ ராவ் தலைமை வகித்தார். விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதவாது:- டாக்டர் எம்.ஜி.ஆர்.  பள்ளி செல்லும் குழந்தைகளின் நலனுக்காக சத்துணவு திட்டத்தினை செயல்படுத்தினார். அவரது வழியில் அம்மா மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் உட்பட 14 விதமான மாணாக்கர் நலத்திட்டங்களை செயல்படுத்தினார்கள்.  அந்த வகையில், பள்ளிக்கல்வித் துறையின் கீழுள்ள பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கம் சார்பாக சிறப்பு எழுத்தறிவு திட்டம் 2019-2021 துவங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்கள், வளர்ச்சியில் முன்னுரிமை பெறும் மாவட்டங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன என்ற அடிப்படையில், கல்வித்துறை சார்ந்த ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு 8 குறியீடுகளை இலக்காக கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இக்குறியீடுகளில் ஒன்றான 15 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் எழுத்தறிவு சதவிகிதத்தை மேம்படுத்துவதில் முன்னுரிமை அளிக்கும் பொருட்டு இத்திட்டம் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் 67,968 கல்வி பயிலாதோர்களுக்கு, அடிப்படை எண்ணறிவும் எழுத்தறிவும் வழங்கப்பட்டு கற்றோர்களாக முன்னேற்றம் அடைய பயிற்சி அளித்திடும் விதமாக திட்டம் செயல்படுத்தப்படுகிறது.  இப்பயிற்சியானது 2019 முதல் 2021 வரையிலான இரண்டு ஆண்டு காலத்தில் 4 கட்டங்களாக தலா 6 மாத கால பயிற்சியாக செயல்படுத்தப்படவுள்ளது. 6 மாத கால பயிற்சிக்குப் பிறகு பின் தேர்வு நடத்தப்பட்டு பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக அடிப்படைக் கல்விச் சான்று அனைவருக்கும் வழங்கப்படும்.  அதன்படி, இத்திட்டத்தினை ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் சிறப்பாக செயல்படுத்திட ஏதுவாக தமிழ்நாடு அரசு மூலம் ரூ.6.23 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும், அம்மாவின் சிறப்பு திட்டமான விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் ஏறத்தாழ 54.50 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.  வருகின்ற டிசம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் சுமார் 92,000 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டுகள் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அதேபோல, சுமார் 7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்  அமைத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  எதிர்வரும் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் விலையில்லா காலணிகளுக்கு மாற்றாக ஷ{ மற்றும் ஷாக்சுகள் (ளூழந யனெ ளூழஉமள) வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினாh.
இவ்விழாவில், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.கருணாஸ் (திருவாடானை), என்.சதன்பிரபாகர் (பரமக்குடி) மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.ஏ.முனியசாமி, பள்ளிக் கல்வித் துறை பள்ளி சாரா வயது வந்தோர் கல்வி திட்ட இயக்கத்தின் இயக்குநர் முனைவர் வி.சி.இராமேஸ்வர முருகன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அ.அன்வர்ராஜா, முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் அ.புகழேந்தி, ராம்கோ கூட்டுறவுத் தலைவர் செ.முருகேசன் உட்பட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து