ரூ. 43 கோடி செலவில் சென்னை, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் புதிய அலுவலக கட்டிடங்கள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2019      தமிழகம்
cm edapadi inaug 2019 11 19

சென்னை : திருவள்ளூர், நாமக்கல், திருப்பூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் 42 கோடியே 90 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டிடங்கள், ஒரு  வணிகவரி அலுவலகக் கட்டிடம் மற்றும் ஒரு சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடங்களை முதல்வர் எடப்பாடிபழனிசாமி தலைமை செயலகத்தில் திறந்து வைத்தார்.

வணிகவரித் துறை அலுவலகங்களுக்கு வருகை புரியும் வணிகர்களுக்கு கூடுதல் வசதி செய்திடும் வகையிலும், பணியாளர்கள் பணிபுரிவதற்கான உகந்த சூழ்நிலையைஉருவாக்கும் வகையிலும், சென்னை – வேப்பேரியில், சென்னை (வடக்கு) வணிகவரி கோட்டத்திற்குட்பட்ட இணை ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட 32 வணிகவரி அலுவலகங்களுடன் 26 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வடசென்னை ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டிடம், திருவள்ளுர் மாவட்டம்  - நசரத்பேட்டையில், சென்னை (தெற்கு) வணிகவரி கோட்டத்திற்குட்பட்ட துணை ஆணையர் (வணிகவரி) சரகம், இரண்டு அலுவலகம் மற்றும் நுண்ணறிவு பிரிவு உள்ளிட்ட16 வணிகவரி அலுவலகங்களுடன் 11 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நசரத்பேட்டை ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டிடம், நாமக்கல் மாவட்டம், நாமக்கல்லில், நாமக்கல் நகர உதவி ஆணையர் (வணிகவரி) அலுவலகம், நாமக்கல் ஊரக உதவி ஆணையர் (வணிகவரி) அலுவலகம் மற்றும் நாமக்கல் வணிகவரி அலுவலர் (செயலாக்கம்) அலுவலகம் ஆகிய 3 அலுவலகங்களுடன் 3 கோடியே  45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நாமக்கல் ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டிடம் மற்றும் திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் 79 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வணிகவரி அலுவலகக் கட்டிடம் ஆகிய கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இப்புதிய வணிகவரி அலுவலகக் கட்டிடங்கள், குழந்தைகள் காப்பகம், உணவு அருந்தும் அறை, குடிநீர் வசதி, கழிவறை வசதி, மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்தள நடைபாதை வசதி, ஊர்தி ஓட்டுநர்களுக்கான ஓய்வு அறை போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.மேலும், பொதுமக்கள் அதிகம் வந்து செல்கின்ற சார்பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்களுக்கு தக்க வசதிகள் அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை கருதியும், வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் சொந்த கட்டிடங்கள் கட்டும் திட்டத்தின்படியும், மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் 94 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடத்தை முதல்வர் எடப்பாடிபழனிசாமி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.சி.வீரமணி, தலைமைச் செயலாளர் சண்முகம், வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மைச் செயலாளர் பாலச்சந்திரன், கூடுதல் தலைமைச்செயலாளர் / வணிகவரி ஆணையர் (முழு கூடுதல் பொறுப்பு) டி.வி. சோமநாதன், பதிவுத்துறைத் தலைவர் ஜோதிநிர்மலா, வணிகவரித் துறை இணை ஆணையர் (நிர்வாகம்) சுந்தரவல்லி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

17.12.2019 to 14.01.2020 Markali Monthly Rasipalan | 2019 டிசம்பர் மாத ராசிபலன்

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து