முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி: டென்மார்க், சுவிட்சர்லாந்து அணிகள் தகுதி

புதன்கிழமை, 20 நவம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

டப்ளின் : 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி அடுத்த ஆண்டு (2020) ஜூன், ஜூலை மாதங்களில் முதல்முறையாக மொத்தம் 12 நாடுகளில் நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கான தகுதி சுற்று தற்போது பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.

அயர்லாந்து தலைநகர் டப்ளினில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் அயர்லாந்து - டென்மார்க் (டி பிரிவு) அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதேபிரிவில் ஜிப்ரால்டரில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணி 6-1 என்ற கோல் கணக்கில் ஜிப்ரால்டர் அணியை தோற்கடித்தது. ‘டி’ பிரிவு லீக் சுற்று முடிவில் சுவிட்சர்லாந்து 17 புள்ளிகளுடன் முதலிடமும் (5 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி), டென்மார்க் 16 புள்ளிகளுடன் (4 வெற்றி, 4 டிரா) 2-வது இடமும் பிடித்து ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றன. ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் மொத்தம் 24 அணிகள் கலந்து கொள்கின்றன. இதுவரை 19 அணிகள் தகுதி பெற்று இருக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து