முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரான்சில் கர்ப்பிணியை கடித்து கொன்ற வேட்டை நாய்கள்

வியாழக்கிழமை, 21 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

பாரீஸ் : பிரான்ஸ் நாட்டில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணை வேட்டை நாய்கள் கடித்துக் குதறி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள வில்லர் கோட்டேரெட்ஸ் நகரை சேர்ந்த 29 வயதான கர்ப்பிணி, அங்குள்ள வனப்பகுதியில் நடைபயிற்சிக்கு சென்றார். அவர் செல்லப் பிராணிகளாக வளர்த்து வந்த 5 நாய்களையும் தன்னுடன் அழைத்து சென்றார். அப்போது வேட்டைக்காரர்கள் மான்களை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தும் வேட்டை நாய்கள் அந்த கர்ப்பிணியை சூழ்ந்து கொண்டு அவரை பயமுறுத்தின. இதையடுத்து, அவர் தனது கணவரை செல்போனில் தொடர்பு கொண்டு, தான் வேட்டை நாய்களிடம் மாட்டிக் கொண்டதாக கூறினார். அதன் பேரில் அவரது கணவர் உடனடியாக அங்கு விரைந்து சென்றார். ஆனால் அதற்குள் வேட்டை நாய்கள் அந்த பெண்ணை கடித்துக் குதறி கொன்று விட்டன. அந்த பெண்ணின் வளர்ப்பு நாய்கள் அவரது உடலின் அருகே அமர்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, விசாரணையை தொடங்கி உள்ளனர். கர்ப்பிணியை கடித்து கொன்ற நாய்களை கண்டறிவதற்காக இதுவரை 93 நாய்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றில் அந்த பெண்ணின் வளர்ப்பு நாய்களும் அடங்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து