முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்

வியாழக்கிழமை, 21 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள 13 கடற்படை துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அமெரிக்க அரசாங்கம் இந்தியாவிற்கு 13 எம்.கே.45 ரக கடற்படை துப்பாக்கிகள் மற்றும் ராணுவ உபகரணங்களை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்கள், உதிரி பாகங்கள், அவற்றை கையாள்வதற்கான பயிற்சி, தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் போக்குவரத்து செலவுகள் ஆகியவை இதில் அடங்கும். இந்த ராணுவ வியாபாரம் மூலம் தங்கள் நாட்டின் வெளியுறவு கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் தனது எதிரிகளை திறன்பட எதிர்கொள்ள இந்த ஆயுதங்கள் உதவியாக அமையும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து