முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று அறுவை சிகிச்சை

வியாழக்கிழமை, 21 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

 சென்னை : நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான  கமல்ஹாசனுக்கு காலில் பொருத்தப்பட்டிருந்த கம்பியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை இன்று நடைபெற இருக்கிறது.   

மக்கள் நீதிமய்யம் கட்சியின் துணைத்தலைவர் டாக்டர் ஆர்.மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2016-ம் ஆண்டு எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தின் காரணமாக கமல்ஹாசனின் வலது காலில் முறிவு ஏற்பட்டது. அதனை சரி செய்வதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது காலில் டைட்டேனியம் கம்பி ஒன்று பொருத்தப்பட்டது.

அரசியல் மற்றும் சினிமாவில் கமல்ஹாசனுக்கு இருந்த தொடர் வேலைப்பளு காரணமாக அக்கம்பியை அகற்றுவதற்கான சூழல் அமையாமல் தள்ளிப் போய்க்கொண்டிருந்தது.

மருத்துவர்களின் ஆலோசனைபடி கமல்ஹாசனுக்கு இன்று  அக்கம்பியை அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து