முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

81 கிலோ லட்டு வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய முலாயம் சிங் யாதவ்

வெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் தனது 81-வது பிறந்தநாளை இன்று விமரிசையாக கொண்டாடினார்.

உத்தர பிரதேசம் மாநிலத்தின் முதல்வராக முன்னர் பதவி வகித்தவர் முலாயம் சிங் யாதவ். 1996-ம் ஆண்டு பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இவர் சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும் ஆவார். இந்நிலையில், முலாயம்சிங் யாதவ் தனது 81-வது பிறந்தநாளை நேற்று லக்னோவில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் வெகு விமரிசையாக கொண்டாடினார். வழக்கமாக வெட்டும் பிறந்தநாள் கேக் உடன் 81 கிலோ எடை உடைய மிகப்பெரிய லட்டும் வெட்டப்பட்டது. முலாயம்சிங் யாதவின் மகனும் சமாஜ்வாடி கட்சியின் தற்போதைய தலைவருமான அகிலேஷ் யாதவ், கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பலரும் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். உத்தரபிரதேச மாநில முதல்வர்  யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் முலாயம் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து