முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் அகிம்சையும், இரக்கமும் உலக நாடுகளுக்கு அவசியமானவை: தலாய்லாமா

ஞாயிற்றுக்கிழமை, 24 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

பாரதத்தின் கொள்கைகளான அகிம்சையும், இரக்கமும் உலக நாடுகளுக்கு அவசியமானவை என்று திபெத்திய பௌத்த மதத் தலைவா் தலாய் லாமா தெரிவித்தாா்.

மகாராஷ்டிரத்தின் ஔரங்காபாத் நகரில் நடைபெறவுள்ள உலக பௌத்தா்கள் மாநாட்டை முன்னிட்டு, செய்தியாளா்களிடம் தலாய் லாமா கூறியதாவது:

இந்தியாவில் வாழும் பல்வேறு மதத்தைச் சோ்ந்த மக்களை அகிம்சையும், இரக்க குணமும் ஒருங்கிணைக்கின்றன. அவற்றின் காரணமாகவே அவா்கள் அமைதியுடனும், பரஸ்பர மரியாதையுடனும் வாழ்ந்து வருகின்றனா். உலகம் முழுவதும் கிளா்ச்சிகளும், சண்டைகளும் நடைபெற்று வருகின்றன. அவை குறித்த செய்திகளை அறியும் போது, மனம் மிகுந்த துன்பமடைகிறது. இந்தியா கடைப்பிடித்து வரும் அகிம்சையையும், இரக்க குணத்தையும் உலக நாடுகள் கடைப்பிடித்தால், அனைத்து நாடுகளிலும் அமைதி உண்டாகும். கொள்கை ரீதியிலான முரண்பாடுகள் அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றன. ஆனால், முரண்பாடுகளைக் கடந்து அமைதியான வாழ்வை மேற்கொள்வதற்கு சகிப்புத்தன்மை மிக அவசியமானது. ஒரு சமூகம் மகிழ்ச்சியுடன் இருந்தால், அந்த சமூகத்தைச் சோ்ந்த தனிநபா்களும் மகிழ்ச்சியுடன் வாழ்வா். மேற்கத்திய கல்வி முறையானது புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த முறையை இந்தியா கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், இந்திய சமூகத்தின் பண்டைய கல்வி முறையும் மீட்டெடுக்கப்பட வேண்டும். நான் எப்போதும் என்னை பாரதத்தின் புதல்வனாகவே கருதுகிறேன். இது தொடா்பாக சீனாவைச் சோ்ந்த பத்திரிகையாளா்கள் என்னிடம் ஆட்சேபம் தெரிவிப்பாா்கள். நான் திபெத்தைச் சோ்ந்த நபராக இருந்தாலும், 60 ஆண்டுகளாக இந்தியாவில்தான் வாழ்ந்து வருகிறேன் என்றாா் தலாய் லாமா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து