முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானின் நடவடிக்கை குறித்து ஐக்கிய அமீரகத்துடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 24 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

ஈரானின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ ஐக்கிய அமீரகத்துடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இது குறித்து ஏ.என்.ஐ. வெளியிட்ட செய்தியில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, ஐக்கிய அமீரக வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா பின் சயத்துடன் ஈரானின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும் பிராந்தியப் பிரச்சினைகள் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பு குறித்து மைக் பாம்பியோ தனது டுவிட்டர் பக்கத்தில், ஈரானின் நடவடிக்கைகள் பிராந்தியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி இருப்பது குறித்து ஐக்கிய அமீரக வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தினேன். மேலும் லிபியா, ரஷ்யா குறித்து ஆலோசனை நடத்தினோம் என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் யுரேனியம் செறிவூட்டலுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அணுசக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்றும் அணு ஆயுதத் தயாரிப்புக்குப் பயன்படுத்த மாட்டோம் என்றும் ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டன.

இந்நிலையில் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த மாதம் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஈரான் அணு ஆயுத சோதனை ஒப்பந்தங்களை அவ்வப்போது மீறி வருகிறது. இதன் காரணமாக ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து