முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தாவில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்னில் அபார வெற்றி பெற்றது இந்தியா

ஞாயிற்றுக்கிழமை, 24 நவம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : கொல்கத்தாவில் நடைபெற்ற வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது.

இந்தியா- வங்காளதேசம் அணிகள் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 30.3 ஓவர்களில் 106 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பந்து வீச்சில் இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கேப்டன் விராட் கோலியின் (136 ரன்கள்) அபார சதம் , புஜாரா (55 ரன்கள்),  ரகானே (51 ரன்கள்) ஆகியோரின் அரைசதம் ஆகியவற்றால், இந்திய அணி வலுவான நிலையை எட்டியது.இந்திய அணி 89.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்திருந்த நிலையில் தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. வங்காளதேசத்தை விட 246 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து, வங்காளதேசம் 2-வது இன்னிங்சை தொடங்கியது. இதிலும் இந்திய பந்து வீச்சாளர்கள் துல்லியமாக பந்துவீசினர். வங்காளதேசம் அணியில் முஷ்பிகுர் ரஹிம் ஓரளவு தாக்குப் பிடித்து அரை சதமடித்தார். அவர் 74 ரன்னில் அவுட்டானார். 39 ரன்கள் எடுத்த நிலையில் மகமதுல்லா காயத்தால் வெளியேறினார்.

இந்நிலையில், நேற்று 3-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. உமேஷ் யாதவ் சிறப்பாக பந்துவீசி வங்காளதேச வீரர்களை அவுட்டாக்கினார். இறுதியில், வங்காளதேசம் அணி 41.1 ஓவரில் 195 ரன்னில் ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 5 விக்கெட்டும், இஷாந்த் சர்மா 4 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி 2-0 தொடரை கைப்பற்றி அசத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து