முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் பாப் பாடகி வீட்டில் ரூ.2½ கோடி நகைகள் திருட்டு

திங்கட்கிழமை, 25 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகி இக்கி அசலியா வீட்டில் ரூ.2 கோடியே 62 லட்சத்து 76 ஆயிரம் மதிப்புடைய ஆடம்பர நகைகள் கொள்ளை போனது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக இக்கி அசலியா போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகி இக்கி அசலியா. இவருக்கு அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் தலைநகர் அட்லாண்டாவில் சொந்தமாக வீடு உள்ளது. கடந்த ஒரு ஆண்டாக அவர் இங்குதான் வசித்து வருகிறார். இக்கி அசலியாவின் காதலரும், பிரபல ராப் பாடகருமான பிளேபாய் கார்ட்டியும் அவருடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி இரவு இக்கி அசலியா மட்டும் தனியாக வீட்டில் இருந்தார். அப்போது, வீட்டின் பின்பக்க வழியாக உள்ளே நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் இக்கி அசலியாவின் நகை பையை திருடி சென்றனர். அந்த பையில் 7 வைர மோதிரங்கள் உள்பட 3 லட்சத்து 66 ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார். ரூ.2 கோடியே 62 லட்சத்து 76 ஆயிரம்) மதிப்புடைய ஆடம்பர நகைகள் இருந்தன.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக இக்கி அசலியா மற்றும் பிளேபாய் கார்ட்டி இருவரும் இணைந்து போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து