முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தை போட்டியில் : தீபிகா குமாரி, அட்டானு தாஸ் வெண்கல பதக்கம் வென்றனர்

திங்கட்கிழமை, 25 நவம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

பாங்காக் : ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தையில் இந்திய கலப்பு இரட்டையர் ஜோடியான தீபிகா குமாரி, அட்டானு தாஸ் வெண்கல பதக்கம் வென்றனர்.

ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தை பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான தீபிகா குமாரி - அட்டானு தாஸ் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் சீனாவின் யிச்சை செங் - சயோஜுயுயான் வெய் ஜோடியை எதிர்கொண்டார். இதில் இந்திய ஜோடி 6-2 என வெற்றி பெற்றது.இந்திய பெடரேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டால் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பொதுவான கொடியை ஏற்றுள்ளனர்.

மற்றொரு ஜோடியான அபிஷேக் வர்மா - ஜோதி சுரேகா அரையிறுதியில் கொரியா ஜோடியை 159-154 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் சீன தைபே ஜோடியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி நாளைமறுநாள் நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து