முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் நலனுக்கு எதிராக எதுவும் செய்யமாட்டோம் ; கோத்தபய ராஜபக்சே உறுதி

செவ்வாய்க்கிழமை, 26 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

கொழும்பு : நான் இனவெறி பிடித்தவன் அல்ல. இந்தியாவின் நலனுக்கு எதிராக எதுவும் செய்யமாட்டோம் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.

 இலங்கையில் புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள கோத்தபய ராஜபக்சே சீனாவின் ஆதரவாளர் என கூறப்பட்டு வருகிறது. அவர் தனது முதல் வெளிநாட்டு பயணமாக வருகிற 29-ந் தேதி இந்தியா வருகிறார். இந்நிலையில் கோத்தபய ராஜபக்சே ஒரு இந்திய மின்னணு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நட்பு நாடு என்ற வகையில் நாங்கள் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவோம். இந்தியாவின் நலனுக்கு எதிராக அமையும் எதையும் செய்யமாட்டோம். நாங்கள் நடுநிலையான நாடாகவே இருக்க விரும்புகிறோம். வல்லரசுகளின் அதிகார போட்டிக்கு இடையே நாங்கள் நுழைய விரும்பவில்லை. நாங்கள் மிகவும் சிறிய நாடு.

நாங்கள் அனைத்து நாடுகளுடனும் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். மற்ற எந்த நாடுகளின் நலனுக்கும் எதிராக அமையும் எந்த செயலிலும் ஈடுபடமாட்டோம். இந்தியா கவலைப்படுவதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொண்டிருக்கிறோம். எனவே இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையிலும் நாங்கள் ஈடுபடமாட்டோம்.

இந்திய பெருங்கடல் இப்போதுள்ள பூகோள அரசியலில் முக்கிய பங்காற்றி வருகிறது. கிழக்கில் இருந்து மேற்கு நாடுகளுக்கு செல்லும் அனைத்து கடல் மார்க்கமும் இலங்கைக்கு அருகில் செல்கிறது. எனவே இந்த கடல்மார்க்கம் சுதந்திரமானதாகவே இருக்கும். எந்த நாடும் இந்த கடல்மார்க்கத்தை கட்டுப்படுத்த முடியாது.  இவ்வாறு அவர் கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து