Idhayam Matrimony

திருமங்கலம் நகரில் விலை வீழ்ச்சியடைந்த சின்ன வெங்காயம்! 2 கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையானதால் பொதுமக்கள் மகிழ்ச்சி!!

செவ்வாய்க்கிழமை, 26 நவம்பர் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து 2 கிலோ 100ரூபாய்க்கு மினி ஆட்டோக்களில் வைத்து வீதிகளில் கூவிகூவி விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்து அதிகளவு வெங்காயத்தை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
வெங்காயத்தை அதிகளவு விளைவித்திடும் கர்நாடகா,ஆந்திரா,தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வெங்காய உற்பத்தி கடுமையாக பதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகிறது.தற்போது மதுரை மாவட்டத்தில் சின்ன வெங்காயம் கிலோ 140 முதல் 180 வரையிலும்,பெரிய வெங்காயம் 100 முதல் 140 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் 50டன்னுக்கு மேல் வெங்காயத்தை பதுக்கி வைத்திருக்கும் காய்கறி வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் வெங்காயத்தில் சற்றே தணிந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் திடீரென்று ஊடுருவிய மினி ஆட்டோக்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60ருபாய் என்றும் 2 கிலோ வாங்கினால் 100ரூபாய் என்றும் ஒலிபெருக்கி மூலம் கூவிக்கூவி அறிவிப்பு செய்யப்பட்டு விற்பனையை தொடங்கியது.இதனையறிந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி வந்து தாங்கள் காண்பது கனவா அல்லது நனவா என்று தங்களைத் தாங்களே கேட்டபடி சின்ன வெங்காயத்தை விற்பனை செய்திடும் மினி ஆட்டோக்களை சுற்றி வளைத்து வாங்க ஆரம்பித்தனர்.வெளி மார்க்கெட்டில் அதிக விலைக்கு வெங்காயம் விற்கப்படும் நிலையில் மலைப்பிரதேசத்தில் விளைந்த இந்த சின்ன வெங்காயத்தை வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்ட சில வியாபாரிகள் 2கிலோ 100ரூபாய்க்கு விற்பனை செய்ததால் பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு அதிகளவு வெங்காயத்தினை வாங்கிச் சென்றனர்.நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில் திருமங்கலம் நகரில் மட்டும் மினி ஆட்டோக்களில் வைத்து சின்ன வெங்காயம் 2 கிலோ 100ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டம் முழுவதிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து