முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணிக்கு டோனி திரும்புவது குறித்து முடிவு: ரவி சாஸ்திரி பதில்

செவ்வாய்க்கிழமை, 26 நவம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

மும்பை : ஐ.பி.எல். 2020 சீசனில் எம்.எஸ். டோனி எவ்வாறு விளையாடுகிறார் என்பதை பொறுத்துதான் இந்திய அணிக்கு திரும்புவது குறித்து முடிவு செய்யப்படும் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்.எஸ். டோனி, இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்குப்பின், ராணுவத்தில் பணிபுரிய இருப்பதால் சிறிது காலம் ஓய்வு எடுத்திருந்தார். அவரது ஓய்வுக் காலம் முடிந்த பின்னரும் அணியில் சேர்க்கப்படாமல் இருக்கிறார். இதனால் அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை அணியில் அவர் விளையாடுவாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. அணி நிர்வாகம் மற்றும் முக்கிய வீரர்களிடம் இதுகுறித்து கேட்டால், அது எம்எஸ் டோனியின் முடிவு. அவரது ஓய்வு முடிவை அவர்தான் எடுப்பார் என்று தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர் 2020 ஐ.பி.எல் தொடரில் எப்படி விளையாடுகிறார் என்பதை சார்ந்துதான் அணிக்கு திரும்பும் முடிவு எடுக்கப்படும் என தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். டோனி குறித்து ரவி சாஸ்திரி கூறுகையில்,

எம்எஸ் டோனி மீண்டும் கிரிக்கெட் விளையாடும் போது, அவர் 2020 ஐ.பி.எல். தொடரில் எப்படி விளையாடுகிறார் என்பதை பொறுத்துதான் இந்திய அணிக்கு திரும்புவது குறித்து முடிவு செய்யப்படும். விக்கெட் கீப்பராக மற்ற வீரர்கள் எப்படி செயல்படுகிறார்கள். டோனியின் பார்முக்கு சவாலாக யார் இருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். ஐ.பி.எல் மிகப்பெரிய தொடர், ஏனென்றால் ஏறக்குறைய உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்தபிறகு நடக்கும் கடைசி தொடராகும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து