முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவாவை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர்

புதன்கிழமை, 27 நவம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

கோவா : 10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கோவா நேரு ஸ்டேடியத்தில் அரங்கேறிய 24-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா அணி, ஜாம்ஷெட்பூரை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 17-வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் வீரர் செர்ஜியோ கேஸ்டல் கோல் அடித்தார். பதில் கோல் திருப்ப கோவா கடுமையாக போராடியது.

பந்து கோவா (63 சதவீதம்) வசமே அதிகமாக சுற்றிக் கொண்டிருந்தது. இலக்கை நோக்கி நிறைய ஷாட்டுகளையும் அடித்தனர். ஆனால் எதுவும் கைகூடவில்லை. 72-வது நிமிடத்தில் எதிரணி வீரரை காலால் இடறி விட்ட கோவா வீரர் அகமது ஜோஹோ சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டது, அந்த அணிக்கு மேலும் பின்னடைவாக அமைந்தது. முடிவில் ஜாம்ஷெட்பூர் 1-0 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து