திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை 10 நாட்கள் நடத்த முடிவு

சனிக்கிழமை, 30 நவம்பர் 2019      ஆன்மிகம்
tirupathy 2019 08 26

திருப்பதி : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 10 நாட்கள் நடப்பதை போல் திருப்பதி கோவிலிலும் வைகுண்ட ஏகாதசி விழாவை 10 நாட்கள் நடத்த திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. அன்று நள்ளிரவில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி மற்றும் 7-ந்தேதி வைகுண்ட துவாதசி விழா ஆகியவை நடக்கிறது. பரமபத வாசல் வழியாகச் சென்று பக்தர்கள் 2 நாட்கள் மட்டுமே வழிபட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். 

பலர் சாமி தரிசனம் செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்தநிலையில் வைணவ திவ்ய தேசங்களின் தலைமையிடமான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 10 நாட்கள் நடத்தப்படுகிறது. அதேபோல் திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் வைகுண்ட ஏகாதசி விழாவை 10 நாட்கள் நடத்த திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது. 

திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் முடிவுக்கு ஏழுமலையான் கோவிலின் ஆகம பண்டிதர்கள் இசைவு தெரிவித்துள்ளனர். டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நடக்கும் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் ஆலோசனை செய்து, முடிவெடுக்கப்படும், என தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து