முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிர சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு - உத்தவ் தாக்கரே அரசு வெற்றி

சனிக்கிழமை, 30 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

மும்பை : மகாராஷ்டிர சட்டசபையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.  

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் சேர்ந்து “மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி” என்ற புதிய கூட்டணியை உருவாக்கி ஆட்சிக்கு வந்துள்ளன.சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்- மந்திரியாக பதவி ஏற்றார். அவருடன் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த தலா 2 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

உத்தவ் தாக்கரே சட்ட சபையில் தனக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை வரும் 3-ந்தேதிக்குள் நம்பிக்கை ஓட்டெடுப்பு மூலம் நிரூபித்து காட்ட வேண்டும் என்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார். அதன்படி மகாராஷ்டிர மாநில சட்டசபையின் 2 நாள் சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது.

முதல் நாளான நேற்று சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. நேற்று  பிற்பகல் சபை கூடியதும் சட்டப்பேரவை விதிகளின் படி சிறப்புக்கூட்டம் கூட்டப்படவில்லை என பாஜக குற்றச்சாட்டி அமளியில் ஈடுபட்டது. எதிர்க்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக அமளியில் ஈடுபட்டனர்.

சபாநாயகரை நியமித்த பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முன்னாள் முதல்வர் பட்னாவிஸ் கோரிக்கை விடுத்தார். இடைக்கால சபாநாயகர் நியமனமும் அரசியலமைப்புகு எதிரானது என்று அவர் குற்றம்சாட்டினார். 

எதிர்க்கட்சி உறுப்பினர்களை அமைதி காக்கும்படி இடைக்கால சபாநாயகர் கேட்டுக்கொண்டார். ஆனால், தொடர்ந்து சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், உத்தவ் தாக்கரே அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 169 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து