முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

18 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய விலங்கு உடல் சைபீரியாவில் கண்டெடுப்பு

ஞாயிற்றுக்கிழமை, 1 டிசம்பர் 2019      உலகம்
Image Unavailable

 மாஸ்கோ : 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்து இறந்து போனதாக கருதப்படுகிற ஒரு விலங்கின் உடல் அப்படியே உறைந்து போன நிலையில் சைபீரியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  

சைபீரியாவின் வடகிழக்கு பகுதியில், பெலாயா கோரா என்ற நகரத்துக்கு அருகே 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்து இறந்து போனதாக கருதப்படுகிற ஒரு விலங்கின் உடல் அப்படியே உறைந்து போன நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அந்த விலங்கின் உடல், இப்போதுதான் இறந்து போன ஒரு விலங்கின் உடல் போலவே இருப்பது ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

குறிப்பாக விலங்கின் முடி, பற்கள் அழியாமல் உருக்குலையாமல் இருக்கின்றனவாம். அந்த விலங்கு பிறந்து 2 மாதங்களிலேயே செத்திருக்க கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இந்த விலங்கின் உடலை ஆராய்ச்சியாளர்கள் லவ் டேலன், டேஸ் ஸ்டேன்டன் ஆகியோர் தொடர் ஆராய்ச்சிக்காக சுவீடனுக்கு எடுத்துச்சென்றுள்ளனர். அதே நேரத்தில் இறந்து போன விலங்கு நாய்க்குட்டியா, ஓநாய்க்குட்டியா என்பதை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து