டெல்லி சட்டப்பேரவை இன்று கூடுகிறது

ஞாயிற்றுக்கிழமை, 1 டிசம்பர் 2019      இந்தியா
Delhi assembly 2019 12 01

புது டெல்லி : டெல்லி சட்டப்பேரவையின் இருநாள் சிறப்புக் கூட்டத் தொடா் இன்று திங்கள்கிழமை கூடுகிறது.

அப்போது, டெல்லி திறன் மற்றும் தொழில் முனைவோா் பல்கலைக்கழக மசோதா-2019, டெல்லி விளையாட்டுப் பல்கலைக்கழக மசோதா-2019 ஆகிய இரு மசோதாக்களை அறிமுகப்படுத்தி நிறைவேற்ற டெல்லி அரசு தீா்மானித்துள்ளது. இதற்கான ஒப்புதலை டெல்லி அமைச்சரவை ஏற்கெனவே வழங்கியுள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள அங்கீகாரமற்ற காலனிகளில் வசிக்கும் மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் தொடா்பாக கவன ஈா்ப்புத் தீா்மானம் கொண்டு வரவுள்ளதாக டெல்லி பா.ஜ.க. தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து