முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெற்காசிய விளையாட்டு: தடகளத்தில் ஒரே நாளில் 10 பதக்கங்களை அள்ளிய இந்தியா

செவ்வாய்க்கிழமை, 3 டிசம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

காத்மாண்டு : நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் நடந்து வரும் 13-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தடகளப் பிரிவில் ஒரே நாளில் இந்திய வீரர், வீராங்கனைகள் 10 பதக்கங்களை வென்றனர்.

தடகளத்தில் இந்திய வீரர், வீராங்கனைகள் நேற்று 4 தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் 13-வது தெற்காசியப் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவுகள், பூடான், நேபாளம் ஆகிய 7 நாடுகளின் வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.தடகளப் போட்டிகள் நேற்று நடந்தன. இதில் மகளிர் 100 மீட்டர் பிரிவில் இந்திய வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன், உயரம் தாண்டுதலில் எம். ஜாஷ்னா, ஆடவர் பிரிவு உயரம் தாண்டுதலில் சர்வேஷ் அனில் குஷாரே ஆகியோர் தங்கம் வென்றனர். ஆடவருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் அஜய்குமார் சரோஜ் தங்கம் வென்றார். அர்ச்சனா சுசீந்திரன் 100 மீட்டர் தொலைவை 11.80 வினாடிகளில் கடந்தார். வெள்ளிப் பதக்கத்தை இலங்கை வீராங்கனை தனுஜா அமாஷாவும் (11.82), வெண்கலத்தை லக்சிக்கா சுகந்தும் வென்றனர். மகளிர் உயரம் தாண்டுதலில் ஜாஸ்னா 1.73 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார். இந்திய வீராங்கனை ரூபினா யாதவ் 1.69 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலம் வென்றார். ஆடவர் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் குஷாரே 2.21 மீட்டர் உயரம் தாண்டி தங்கத்தையும், சக இந்திய அணி வீரர் சேட்டன் பாலசுப்பிரமணி 2.16 மீட்டர் தாண்டி வெள்ளியையும் வென்றார். 1500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் சரோஜ் 3.54.18 வினாடிகளில கடந்து தங்கத்தையும், அஜ்ஜீத் குமார் வெள்ளியையும், நேபாள வீரர் தனகா கார்கி வெண்கலத்தையும் வென்றனர். 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை கவிதா யாதவ் 35 நிமிடங்கள் 7.95 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். முன்னதாக, 1500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சந்தா வெள்ளியையும், சக நாட்டு வீராங்கனை சித்ரா பாலகீஸ் வெண்கலத்தையும் கைப்பற்றினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து