சென்னையின் எப்.சி. அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்

புதன்கிழமை, 4 டிசம்பர் 2019      விளையாட்டு
Chennai FC Coach 2019 12 04

சென்னை : இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி அணி 2 முறை சாம்பியன் பட்டம் வென்றது. இதில் இங்கிலாந்தைச் சோ்ந்த ஜான் கிரகோரி பயிற்சியில் கடந்த 2017-18-இல் பட்டம் வென்றது. கடந்த 2018-19 சீசன் சென்னை அணிக்கு மிகவும் சோகமாக அமைந்தது. புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தையே பெற்றது. இந்நிலையில் தற்போதைய சீசனிலும், சென்னை அணிக்குத் தொடக்கம் முதலே வெற்றிகளை ஈட்ட முடியவில்லை. பெங்களூருவுடன் 3-0 என தோல்வியடைந்த போதே, தனது பதவியை விட்டு விலகப் போகிறேன் என கிரகோரி கூறியிருந்தாா். 6 ஆட்டங்களில் ஒரே ஒரு வெற்றியை தான் சென்னை அணி பெற்றுள்ளது. இதனால் தலைமைப் பயிற்சியாளா் பதவியில் இருந்து விலகி விட்டாா் ஜான் கிரகோரி.

இந்நிலையில் சென்னையின் எப்.சி அணிக்குப் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 53 வயது ஓவன் கொய்லே இந்த சீஸன் முடியும் வரை பயிற்சியாளராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் எப்.சி அணி, டிசம்பர் 9 அன்று ஜாம்ஷெட்பூா் எப்.சி அணியை எதிர்கொள்கிறது

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து