முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெங்காய விலை உயர்வு எதிரொலி: அமித்ஷா தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது.

வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் இந்தியா வந்தடைவதற்கு முன்னதாகவே வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. பாராளுமன்றத்திலும் இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் எழுந்துள்ளன. மாநில அரசுகளும் விலை குறைப்பது தொடர்பாக கோரிக்கைகளை வைத்துள்ளன. இந்த நிலையில், வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக டெல்லியில் அமித்ஷா தலைமையில் மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் முக்கிய மத்திய அமைச்சர்களும், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இறைக்குமதி செய்யப்படும் வெங்காயத்தை எவ்வாறு பிரித்து மாநிலங்களுக்கு அனுப்பலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து