முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எகிப்தில் இருந்து வருகிறது 500 மெட்ரிக் டன் வெங்காயம் : அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அறிவிப்பு

சனிக்கிழமை, 7 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

வரும் 10-ம் தேதி எகிப்தில் இருந்து தமிழகத்திற்கு 500 மெட்ரிக் டன் வர இருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார். வெங்காய விலை அதிகரித்து உள்ள நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த மாதம் ஆலோசனை மேற்கொண்டதாகவும் தொடர்ந்து விலை நிலைப்படுத்தும் நிதியம் மூலமாக குறைந்த விலைக்கு வெங்காயம் தமிழகத்தில் பண்ணை பசுமை மையத்தில் விற்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்பார்த்த அளவு வெங்காய வரத்து கிடைக்காத காரணத்தால் வெங்காய விலை அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், மத்திய அரசானது நபார்டு வங்கி மூலமாக எகிப்திலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய உள்ளதாகவும் வருகின்ற 10-ம் தேதி 500 மெட்ரிக் டன் வெங்காயம் தமிழகத்திற்கு தர உள்ளதாகவும் தொடர்ந்து அடுத்த கட்டமாக 500 மெட்ரிக் டன் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் வெங்காயத்தை பதுக்கி கள்ள சந்தையில் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் உணவுத்துறை மூலமாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வெங்காயத்தை பதுக்கி வைப்பவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். எனவே தமிழக அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கை காரணமாக விரைவில் வெங்காயத்தின் விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் தற்போது தமிழகத்தில் சிறிய வெங்காயம் அறுவடை செய்யும் காலம் என்பதால் விலை கட்டுப்பாட்டில் வருவதற்கு சாத்தியம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து